சூறாவளி எப்படி உருவாகின்றது ?

சூறாவளி உருவாக தேவையான காரணிகள்?

சூறாவளி உருவாக 3 காரணிகள் தேவை, ஒன்று ஓரளவு வெப்பமான கடல் நீர் [இது 26 டிகிரி செல்சிஜஸ் ஆவது இருக்க வேண்டும் ]
சூறாவளி உருவாக அதிகளவான சூடான நீர் தேவைபடும் எனவே இது கடலில் தான் உருவாகின்றது.

இரண்டாவது மேலே செல்லும் சூடான காற்று தேவை.
கடலில் சூரிய வெப்பத்தால் நீர் சூடாகும் எனவே சூடான நீர் மேலே செல்லும் இதன் போது கடல் மட்டத்திக்கு மேலே உள்ள காற்று சூடாக்கி அந்த காற்று மேலே செல்லும்.
[மேலே சென்ற சூடான காற்று மற்றும் சூடான நீர் மேலே குளிர் ஆகி மேக கூட்டங்களை உருவாக்கும்] இந்த மேக கூட்டங்கள் பின் மழையாக பெய்யும் . இவ்வாறு மழை உருவாகின்றது .

மேலே சூடான காற்று செல்வதால் அங்கு காற்று அழுத்தத்தில் உயர்வு ஏற்படும். அதாவது ஏற்கனவே அங்கு காற்று இருக்கும் கீழிருந்து சூடான காற்றும் செல்வதால் அங்கே கலந்து கொள்ளும் எனவே அங்கு காற்று அழுத்தத்தில் உயர்வு ஏற்படும்.
எனவே கீழே கடல் மட்டத்தில் காற்று அழுத்ததில் தாழவு இருக்கும். இதை தான் காற்று அழுத்த தாளவுநிலை எனப்படும்.

ஆகவே இந்த காற்று அழுத்த தாளவுநிலையை சமன் செய்வதக்கு வெளியில் இருந்து கடல் மேட்பரப்புக்கு காற்று வேகமாக வரும் .வந்த காற்று மறுபடியும் சூடாகி மேலே செல்லும் பிறகு அதை நிரப்ப மீண்டும் காற்று வரும் .

வருகின்ற காற்று கோரிஜோலிஸ் விளைவு காரணமாக சுழலும் இவ்வாறு தொடர்ச்சியாக வேகமாக நடக்கும் போது[62km to 88 km ]புயல் உருவாகின்றது. 88 km க்கு மேல் வீசினால் சூறாவளி என்று அழைக்கபடும் .

சூறாவளி எவ்வாறு வலுவிழக்கிறது?

புயலுக்கு எரிபொருள் தண்ணீர் எனவே இது அதிகளவில் கிடைத்தால் தான் புயல் உருவாகும். ஆகவே கடலில் தான் அதிகளவில் நீர் இருக்கு நிலத்தில் அதிகளவு நீர் கிடைப்பது இல்லை எனவே புயலுக்கு எரிபொருள் இல்லை எனவே கரையை தொடும் போது புயல் வலுவிழக்கிறது.

சூறாவளிகளுக்கு பெயர் எவ்வாறு வைக்கப்படும்?

வங்கக்கடலில் உருவாகும் பூயலுக்கு ஏசியா பசுபிக் நாடுகளான 13 நாடுகள் இதற்கு பெயர்களை வைக்கின்றன The 13 countries are Bangladesh,India,Iran,Maldives,Myanmar,Oman,Pakistan,Qatar,Saudi Arabia, Sri Lanka, Thailand, UAE, and Yemen.

போன்ற நாடுகள் ஆகும் இது ஒவ்வொரு புயலுக்கும் ஓடராக ஒவ்வொரு நாடும் பெயர்களை வைக்கும் தற்போது உருவான புயலுக்கு சவுதியரேபியா fengal என்று பெயர் வைத்திருக்கின்றது. அடுத்து ஸ்ரீலங்கா சக்தி என்று பெயர் வைக்கும். அடுத்து தாய்லாந்து montha என்று பெயர் வைக்கும். இவ்வாறு ஒவ்வொரு 13 நாடும் மாறி மாறி ஒவ்வொரு சூறாவளியும் உருவாகும் போது பெயர் வைக்கும்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *